நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளிடம் தோற்பதற்கு முன்பு இந்திய அணி வெளியேற வேண்டும் – நடிகர் சரத்குமார்
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் விளையாடி தோல்வி அடைந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஏற்கனவே, பாகிஸ்தான் அணியுடனான முதல் போட்டியிலும் தோல்வியடைந்த இந்திய அணி தற்போது இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடனும் தோல்வி அடைந்துள்ளதால் ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை இழந்த நிலையில் தான் உள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், ஐபிஎல்லுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பிசிசிஐயோ, இந்திய வீரர்களோ உலகக் கோப்பை மாதிரியான போட்டிக்கு அளித்தது போல தெரியவில்லை எனவும் அணி தேர்வு எதுவும் சரியில்லை எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ஐபிஎல் போட்டிகளில் நல்ல ஃபார்மில் விளையாடிய வீரர்களை விட்டுவிட்டு காயத்தினால் வெளியேறி திரும்பியுள்ள ஃபார்மில் இல்லாத வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி #Banipl என்ற ஹேஷ்டேக்கிலும் நெட்டிசன்கள் பதிவுகளை வெளியிட்டு பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இந்திய கிரிக்கெட் அணியை டிவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் “இது நமது அணியின் அவமானகரமான, இரண்டாம் தரமான, பொறுப்பற்ற ஒரு ஆட்டம். நமீபியா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளால் நாம் அவமானப் படுத்தப்படும் முன்பு இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும். மற்ற வீரர்கள் அனைவரும். தங்கள் நாட்டுக்காக விளையாடுகின்டிரம்மர் மெளி t20 ஆட்டத்தை நன்றாகத் தெரிந்து வைத்துள்ளது போல் தெரிகிறது. நமது ஆட்கள் ஐபிஎல்-lil ஆடட்டும்” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.