அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் விஜய்யும் நடிக்கிறாரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார்.முன்னதாக இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.எந்திரன் மற்றும் நண்பன் திரைப்படங்களில் இவர் உதவி இயக்குனராக இருந்தார்.இவரின் முதல் படமான ராஜா ராணி 2013ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது.இந்த படத்திற்கு இவர் தமிழ்நாடு அரசின் சிறந்த வசனத்திற்கான விருதை வென்றார்.
இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும் நயன்தாரா கதாநாயகியாகவும் நடித்தனர்.ஜீவி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைத்தார்.பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் ஏ.ஆர்.முருகதாஸ் புரடக்சன்சும் இணைந்து இந்த படத்தை தயாரித்தது.இந்த படத்தை அடுத்து அட்லி நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்கினார்.2016ம் ஆண்டு தெறி படத்தின் மூலம் இவர் தன்னுடைய அடுத்த வெற்றியையும் பெற்றார்.இந்த படத்தில் நடிகர் விஜய் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இது இருந்தது.
அடுத்து மீண்டும் நடிகர் விஜய்யுடன் இவர் கூட்டணி அமைத்தார்.மெர்சல் திரைப்படம் மூலம் நடிகர் விஜய் முதல் முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்தார்.2017ம் ஆண்டு இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியானது.தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.இந்த படமும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.தொடர்ந்த இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி மீண்டும் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து பிகில் படத்தை இயக்கினார்.இந்த படம் 2019ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியானது.
இந்த படமும் வெற்றி பெற்றது.அடுத்து அட்லி ஹிந்தியில் நடிகர் ஷாருக் கானை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது.இந்த படத்தில் நயன்தார நாயகியாக நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.ஜவான் என்று பெயரிடப்பட்ட இந்த படத்தில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.இதனால் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.