Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘இது எப்போ’ உயிரிழந்தவர்களின் பட்டியலில் நடிகர் சித்தார்த்!! ‘அடப்பாவிகளா’ என நடிகர் அதிர்ச்சி!!

இறந்தவர்கள் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்ற வீடியோ குறித்து யூடியூப்பில் நடிகர் சித்தார்த் புகார்.

சித்தார்த் என்பவர் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகர் எழுத்தாளர் போன்ற பன்முக தன்மை கொண்டவர். மேலும், சித்தார்த் சூரிய நாராயண் சென்னையில் பிறந்தவர் ஆவார். இவர் தனது இளமைக்காலத்தில் பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார்.

மேலும், தனது முதல் படமான ‘பாய்ஸ்’ படத்தில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதற்குப் பின் இவர் ஆயுத எழுத்து, 18, காதலில் சொதப்புவது எப்படி? மற்றும் உதயம் nh4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா மற்றும் அருவம் போன்ற படங்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தார்.

இந்த நிலையில் இளம் வயதில் உயிரிழந்த நட்சத்திரங்களின் பட்டியலில் நடிகர் சித்தார்த்தின் புகைப்படத்துடன் கூடிய பெயரும் இடம்பெற்றது கண்ட அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இந்த வீடியோ யூடியூப்பில் குறித்து புகார் அளித்துள்ளார்.

எனினும், அந்த வீடியோவில் எந்த பிரச்சனையும் இல்லை என யூடியூப் நிறுவனம் அவருக்கு பதில் அளித்து உள்ளது. அதற்கு நடிகர் சித்தார்த் ‘அடப்பாவி’ என குறிப்பிட்டு அந்த வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தனது பெயர் இடம் பெற்றதை புகார் கொடுத்தற்கு அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version