Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனுஷை வம்புக்கு இழுக்கிறாரா சிம்பு?!

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் பட்டையை கிளப்பியவர் சிம்பு. பின் அவரது தந்தையான இயக்குநர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த திரைப்படம் நல்ல வெற்றியும் பெற்றது.

அதன் பிறகு தம், குத்து, கோவில், சரவணா , மன்மதன் , வல்லவன் போன்ற ஹிட் படங்களில் நடித்தார். இதில் வல்லவன் திரைப்படத்தை அவரே இயக்கி நடித்தது குறிப்பிடத்தக்கது.

2010ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தான்டி வருவாயா திரைப்படத்தில் நடித்தார். இப்படம் நல்ல ஹிட்டும் ஆனது. அதற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய ஹிட் படம் எதுவும் கொடுக்கவில்லை சிம்பு. விஜய்-அஜித் ரசிகர்கள் போல சிம்பு-தனுஷ் ரசிகர்களும் எப்போதும் போட்டிபோட்டு கொள்வார்கள். ஆனால் சிம்புவும் தனுஷும் எங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை நாங்கள் நல்ல நண்பர்கள் என மேடைகளில் கூறிவருகின்றனர்.

தற்போது சிம்பு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியானது. இதில் நீ அழிக்க வந்த அசுரன்னா நா காக்க வந்த ஈஸ்வரன்டா என மிரட்டலான பஞ்ச் டயலாக் பேசியிருப்பார் சிம்பு. இது தனுஷை வம்புக்கு இழுப்பதுபோல் இருப்பதாக தனுஷ் ரசிகர்கள் சிம்புவை இணையத்தில் வறுத்தெடுக்கின்றனர். சிம்புவும் தனுஷும் மேடைகளில் நாங்கள் நல்ல நண்பர்கள் என கூறினாலும் அவரது ரசிகர்கள் எப்போதும் சண்டைபேடும் மனநிலையிலேயே உள்ளனர். இதற்கு தீர்வு சிம்புவிடமும் தனுஷிடமுமே உள்ளது.

Exit mobile version