Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் சிம்பு பிறந்தநாள்.. வித்தியாசமாக கொண்டாடி அசத்திய சேலத்து ரசிகர்கள்!!

  நடிகர் சிம்பு பிறந்தநாள்.. வித்தியாசமாக கொண்டாடி அசத்திய சேலத்து ரசிகர்கள்!!

பேருந்தில் பயணிக்கும் அனைவருக்கும் இலவசமாக பேருந்து பயணசீட்டு எடுத்துக் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாளை கொண்டாடினர்.

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக திகழ்ந்துவரும் நடிகர் சிலம்பரசன் இன்று 40 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.இந்த நிலையில் நடிகர் சிலம்பரசனின் ரசிகர்கள் உற்சாகமாக பிறந்தநாள் கொண்டடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக சேலம் மாவட்ட சிலம்பரசன் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் பிறந்தநாளை கொண்டாடினர்.

சேலம் மாவட்ட சிலம்பரசன் ரசிகர் மன்ற செயலாளர் சிரஞ்சீவி தலைமையில் 20 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இலவசமாக பயணசீட்டை எடுத்துக் கொடுத்து வித்தியாசமான முறையில் பிறந்தநாளை கொண்டாடினர்.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பயணித்த 200க்கும் மேற்பட்டோர்களுக்கு பயண சீட்டுகளை எடுத்துக் கொடுத்து ரசிகர்கள் அசத்தினர். மேலும் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கியும், மரக்கன்றுகள் கொடுத்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் நடிகர் சிலம்பரசன் பிறந்தநாளை வித்தியாசமாக மக்கள் பயன்பெறும் வகையில் பிறந்தநாளை கொண்டாடி வருவதாகவும், இந்த முறை பேருந்தில் பயணிக்கும் எளிமையான மக்களுக்கு பயண சீட்டுகளை எடுத்துக் கொடுத்து மகிழ்ந்திட மகிழ்ந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version