Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிவகார்த்திகேயன் மேடையில் கதறி கதறி அழுதற்கு காரணத்தை வெளியீட்டு  பரபரப்பை ஏற்படுத்திய பிரபல  தயாரிப்பாளர்!!

படிப்படியாக சினிமாவில் முன்னேறிய நடிகர்களின் வரிசையில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் தனது சினிமா வாழ்க்கையை சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தொடங்கினார்.

அதன்பின் ஏழு ஆண்டு கடும் உழைப்பிற்குப் பிறகு தற்பொழுது 15 கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். அவரது சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பெரும்பாலான படங்கள் வெற்றி கண்டது. அவருக்கு குடும்ப ரசிகர்கள் பெருமளவு உள்ளனர்.

மேலும் இவர் அண்மையில் ரெமோ பட வெற்றி விழாவில் மேடையிலேயே  கண்ணீர் விட்ட காட்சிக்கு தற்பொழுது தயாரிப்பாளர் ரவீந்திரன் விளக்கம் தெரிவித்துள்ளார்.

“தமிழ் சினிமாவில் சினிமா வாரிசுகளின் ஆதிக்கம் இல்லை என்று சொன்னாலும் அது இருக்கத்தான் செய்கிறது. சிலரது முன்னேற்றத்தை பார்க்க இயலாதவர்கள் அவர்களை எப்படியாவது கங்கனம் கட்டிக்கொண்டு கீழே தள்ள வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பாலிவுட்டில்  சுஷாந்த் சிங்கிற்கு ஏற்பட்ட மன அழுத்தமே சிவகார்த்திகேயனுக்கும் அன்று மேடையில் ஏற்பட்டுள்ளது அதனால்தான் கண்ணீர் விட்டுள்ளார்.

அவரது முன்னேற்றத்தை காண இயலாதவர்கள், அவரைக் கீழே தள்ள சதி திட்டம் தீட்டி வருகின்றனர் ஆனால் அவர் இப்போது தொடர இயலாத உயரத்தை எட்டி உள்ளார்” எனக் கூறியுள்ளார்

Exit mobile version