Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோலிவுட் டூ டோலிவுட் – தெலுங்கு கற்றுக்கொள்ளும் நடிகர் சிவகார்த்திகேயன்!

Actor Sivakarthikeyan

தனியார் தொலைக்காட்சியின் காமெடி ஷோவில் வந்து தற்போது தமிழ் சினிமாவின் அசைக்க முடியா இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

விஜய் டிவியின் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் முதலிடத்தை பெற்றார். அதன் பிறகு ‘ஜோடி நம்பர் 1’ , ‘பாய்ஸ் vs கேர்ள்ஸ்’ போன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்ற இவர், ‘அது இது எது’, ‘ஜோடி நம்பர் 1’ நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் ஆனார்.

நிகழ்ச்சி தொகுப்பையே பழைய ட்ரெண்டிங்கில் இருந்து மாற்றி முற்றிலும் மாறுப்பட்ட முறையில் ஜாலியாக கொண்டு போனதனால் சின்னத்திரை ரசிகர்களை கட்டிப்போட்டார்.

‘ஏகன்’, ‘3’ படத்தில் சப்போர்டிங் கேரக்டராக வந்த இவர் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். 2013 ஆம் ஆண்டு இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது.

நயன்தாரா, ஹன்சிகா, சமந்தா என முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்தார்.

நடிகராக மட்டும் அல்லாமல் தற்போது, பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக தன்னைத்தானே செதுக்கி கொண்டார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியடைந்தவர் தான் நம் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் காமெடியனாக தன்னை காட்டிக்கொண்ட இவர் வெள்ளித்திரையில் ஒரு மாஸ் ஹீரோவாக மாறிக்கொண்டே வருகிறார்.

தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான டாக்டர் திரைப்படம் திரைக்கு வர தயாராகி கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆக உள்ளது.

டாக்டர் படத்தின் தெலுங்கு ப்ரமோஷன் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பெய்ய சிவகார்த்திகேயன் கூடிய விரைவில் தெலுங்கில் ஒரு படம் நடிக்கவிருப்பதாகவும் அதற்காக தெலுங்கு கற்று வருவதாகவும் கூறினார். இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும்.

 

 

 

 

Exit mobile version