Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாதனைப் படைத்த லியோ திரைப்படம்! என்ன தெரியுமா?

Actor Sivakarthikeyan released the next poster with Alien!

Actor Sivakarthikeyan released the next poster with Alien!

சாதனைப் படைத்த லியோ திரைப்படம்! என்ன தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் தான் லியோ. இவர்கள் இருவரின் கூட்டணியில் மாஸ்டர் திரைப்படம் முன்பே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் சற்று அதிக அளவில் காணப்படுகிறது.

இத்திரைப்படத்தின் பாடல்கள், மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என அனைத்துமே பல கோடி ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றது. மேலும் பெரும் எதிர்பார்ப்புகளை கொண்ட இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கான ப்ரீ புக்கிங்கில் கிட்டத்தட்ட ரூ12 கோடிக்கு மேல் வசூல் சாதனையை படைத்துள்ளது.

இதுவரை எந்த தமிழ் படங்களும் நிகழ்த்தாத ஒரு சாதனையை தர்போது லியோ திரைப்படம் நிகழ்த்தியுள்ளது. பல கோடி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் “வங்காள தேசத்தில்” வெளியாகவுள்ளது என்பது இங்கு மகிழ்ச்சிக்குரிய ஒரு தகவல் ஆகும்.

ஏராளமான தமிழ் திரைப்படங்கள் பல பகுதிகளில் வெளியானது இருப்பினும் “வங்காளதேசத்தில்” முதன்முதலாக வெளியாகயுள்ள முதல் “தமிழ் திரைப்படம்” என்ற பெருமை லியோவையே சாரும்.

Exit mobile version