சீயான் விக்ரம் தான் எனக்கு கோச்: மனம் திறந்த பிரபல நடிகர்!

0
166

புதிய மன்னர்கள் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீமன். தமிழ் சினிமாவில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வரும் ஸ்ரீமன், குணச்சித்திர மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். 

காஞ்சனா  படத்தில் இவரது நடிப்பு அட்டகாசமாக இருக்கும். இவரது கதாபாத்திரம்  சிரிப்பை அடக்க முடியாது, அந்த அளவுக்கு இருக்கும்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருகிறார். தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த், விக்ரம், விஜய், அஜித், முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

இதேபோல் சேது படத்தில் நடிகர் விக்ரமுக்கு நண்பராக நடித்தார். அதன் பின் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ஸ்கெட்ச் படத்தில் நடித்தார். இந்நிலையில் நடிகர் ஸ்ரீமன், தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரமுடன் ஸ்கெட்ச் படத்தில் நடித்த ஸ்டில்களை ஷேர் செய்துள்ளார்.

மேலும் சியான் விக்ரம் உடன் நான் “ஸ்கெட்ச் “ படத்தில் அதிக நேரம் செலவிடுவதால் அவர் எனக்கு சிறு சிறு நுணுக்கங்களையும் கூட கற்றுக் கொடுத்தார். என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்