தலைமையின் வற்புறுத்தலால் தான் அமைச்சராக பதவியேற்றேன்! நடிகர் சுரேஷ் கோபி அவர்கள் பேட்டி!

0
263
#image_title

நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்கும் விழா நேற்று(ஜூன்9) நடைபெற்றது. இந்த விழாவில் ஒன்றிய அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட நடிகர் சுரேஷ் கோபி அவர்கள் தலைமையின் வற்புறுத்தல் காரணமாகத் தான் நான் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் உரிமை கோரினார். இதையடுத்து நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்கும் விழா நேற்று(ஜூன்9) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். இவருடன் 71 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் கேரளா மாநிலத்தில் பாஜக கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ் கோபி அவர்களும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இதையடுத்து பதிவியேற்ற பிறகு நடிகர் சுரேஷ் கோபி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் நடிகர் சுரேஷ் கோபி அவர்கள் “நான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கட்சித் தலைமையிடம் எனக்கு அமைச்சர் பதவியில் விருப்பம் இல்லை என்று முன்கூட்டியே கூறிவிட்டேன். இருப்பினும் கட்சித் தலைமை என்னை பதவியேற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தியதால் தான் நான் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டேன்.

நான் சினிமாவில் நடிக்கவே விரும்புகிறேன். என்னுடைய கோரிக்கையை ஏற்று கட்சித் தலைமை என்னை அமைச்சர் பதிவியில் இருந்து விடுவிக்க வேண்டும். நான் ஏற்கனவே திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளேன். எனவே நான் அந்த திரைப்படங்களில் நடிக்க வேண்டும். இருப்பினும் நான் திருச்சூர் மக்களுக்கு எம்.பியாக பணியாற்றுவேன்” என்று அவர் கூறினார்.

இருப்பினும் பாஜக கட்சி இவருக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்காததால் அதிருப்தி அடைந்த நடிகர் சுரேஷ் கோபி அவர்கள் இப்படி பேசுகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது. பாஜக கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு கூட இணையமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.