Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இத முதல்ல கொடுங்க!.. அப்புறம்தான் ஷூட்டிங்!.. வாடிவாசலுக்கு செக் வைக்கும் சூர்யா!…

suriya

நடிகர் சூர்யா தனக்கு ஹிட் கொடுத்த பெரிய இயக்குனர்களிடமே கறாராக கண்டிஷனெல்லாம் போட்டு பல நல்ல படங்களை மிஸ் பண்னியிருக்கிறார். சூர்யாவுக்கு சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3, வேல் உள்ளிட்ட சில படங்களை இயக்கி அவரை பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக ரசிகர்களின் மனதில் உட்கார வைத்தவர் ஹரிதான்.

ஆனால், அவரின் கதையிலேயே நடிக்க மறுத்தார் சூர்யா. அதன்பின் கதையை கொஞ்சம் மாற்றி தனது மைத்துனர் அருண்விஜயை வைத்து இயக்கினார் ஹரி. அதேபோல், சூர்யாவை வைத்து காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களை இயக்கிய கவுதம் மேனன் சொன்ன துருவ நட்சத்திரம் கதையில் நடிக்க மறுத்தார். அதன்பின் விக்ரம் நடிக்க அப்படம் உருவானது. அதேபோல், சூர்யாவுக்கு சூரரைப் போற்று படத்தை கொடுத்த சுதா கொங்கரா சொன்ன புறநானூறு கதையில் நடிக்க மறுத்தார் அதன்பின் சிவகார்த்திகேயன் நடிக்க அது பராசக்தியாக உருவாகி வருகிறது.

vaadivasal

ஆனால், சிறுத்தை சிவாவை நம்பி அவர் கடுமையான உழைப்பை போட்டு நடித்த கங்குவா படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அப்போதே சூர்யா உணர்ந்திருக்க வேண்டும். ஆனாலும், சூர்யா இன்னமும் மாறவில்லை. 4 வருடங்களுக்கு முன்பு வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் என்கிற கதையில் சூர்யா நடிப்பதாக சொல்லி அறிவிப்பும் வெளியானது.

ஆனால், இப்போது வரை அப்படம் டேக் ஆப் ஆகவில்லை. அதற்கு காரணம் விடுதலை, விடுதலை 2 என இரண்டு படங்களை 4 வருடங்களாக எடுத்து வந்தார் வெற்றிமாறன். இப்போது எனக்கு முழுக்கதையும் சொல்லுங்கள். பைண்டேட் ஸ்கிரிப்ட்டை கொடுத்தால் மட்டுமே வாடிவாசல் படத்தில் நடிப்பேன் என சொல்லிவிட்டாராம் சூர்யா. ஆனால், வெற்றிமாறனோ ஷூட்டிங்கில் யோசித்து காட்சிகளை எடுப்பவர். எனவே, வாடிவாசல் டேக் ஆப் ஆகுமா இல்லை தாமதம் ஆகுமா என்பத் தெரியவில்லை.

Exit mobile version