Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜக தலைவர்களின் பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகர் சூர்யா!

கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்படும் நபர் நடிகர் சூர்யா. இவர் முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய பொழுது மத்திய அரசின் சில திட்டங்களை எதிர்த்து பேசினார். அதாவது மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை, நீட் தேர்வு போன்ற திட்டங்களை விமர்சித்து பேசினார்.

அதாவது புதிய கல்வி கொள்கை மாணவர்களை பெரிதும் பாதிக்கும். நீட் தேர்வு காரணமாக ஏழை மாணவர்கள் பாதிப்படைகின்றன. நீட் கோச்சிங் என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் 5000 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடத்துகின்றனர். ஒரு ஏழை மாணவர் அவ்வளவு தொகையில் எவ்வாறு படிக்க முடியும்.

மேலும் மும்மொழி கொள்கை என்ற பெயரில் ஒரு மொழியை திணிப்பது தவறாகும். அவரவர் தாய் மொழியில் படித்தால் தான் சிரிப்பாக படிக்க முடியும் என்று கூறினார்.

இவரின் பேச்சுக்கு பலரும் ஆதரவாகவும் தெரிவித்தனர். குறிப்பாக நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளிப்படையாகவே சூரியாவுக்கு ஆதரவு தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் சூர்யாவின் கருத்து சரியானது, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகர் சூரியா மீது பாஜக தலைவர்கள் விமர்சனம் வைத்தனர். அமைச்சர் கடம்பூர் ராஜூ, சூரியாவுக்கு என்ன தெரியும்? என்று கேட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சூரியா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது என்று கூறியுள்ளார்.

மேலும், பெற்றோரை இழந்த மாணவி மருத்துவம் முடித்து ராணுவத்தில் பணியாற்றுகிறார். கல் உடைக்கிற தொழிலாளியின் மகன், சென்னை மருத்துவக்கல்லூரியில் மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார். ஆடு மேய்க்கிற பெற்றோரின் மகன், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் ஆகி கிராமப்புறங்களில் பணியாற்றுகிறார்.

இவ்வாறு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Exit mobile version