Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி கூறிய நடிகர் சூர்யா!அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!

நடிகர் சூர்யா அகரம் என்ற அறக்கட்டளையை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இதன் மூலம் ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் படிக்க வைத்து வருகிறார். சமீபத்தில் மாணவ மாணவிகள் மட்டும் தைரியமாக வெளியே வந்து தேர்வு எழுத கூறுவதாக நடிகர் சூர்யா ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.அதற்கு  பல ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திடீரென சூர்யா அவர்கள் தமிழக அரசுக்கு  தன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.அது ஏனெனில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய தானாம்.

அதாவது இதுவரை தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5550 மொத்த மருத்துவ இடங்களில் மாநில அரசு ஒதுக்கீடாக 4043 இடங்கள் உள்ளன.இவற்றில் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் 0.15 சதவீதம் மட்டுமே மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் கிடைக்கின்றன.

அரசு பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் வெவ்வேறு சமூக பொருளாதார பின்னணியைக் கொண்டவர்கள். இவர்கள் கற்கும் பள்ளி , வீடு, பெற்றோர் வருமானம் ஆகிய அனைத்திலும் வேறுபட்டு காணப்படுகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு நேற்று அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தனியாக உள் ஒதுக்கீடு அளித்ததன் காரணமாக நடிகர் சூர்யா முதல்வருக்கு தன் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளார். இந்த ஒதுக்கீட்டால் சுமார் 300க்கும் மேற்பட்ட 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் பயன் அடைவார்கள்.

இந்நிலையில் நடிகர் சூர்யா,” அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும் உறுதுணையாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் மாணவர்களுக்கு துணை நிற்போம் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version