Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா மருத்துமனையில் அனுமதி!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

#image_title

விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா மருத்துமனையில் அனுமதி!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. விஜய், அஜித்தைப் போல் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் சூர்யா, பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனாவார்.

தனது ஆரம்ப கால திரை வாழ்க்கையில் பல்வேறு அவமானங்களை சந்தித்த சூர்யா அதையே தனக்கென பாடமாக எடுத்துக் கொண்டு தனது கடின உழைப்பால் இன்று தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட படங்கள் பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து பல படங்களில் கமிட் செய்யப்பட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சூர்யா அவர்கள் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பத்தானி, காமெடி நடிகர் யோகிபாபு, கோவை சரளா, கிங்ஸ்லி உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர்.

சரித்திர படமாக 3D முறையில் உருவாகி வரும் கங்குவா படத்தின் சண்டை காட்சி இன்று சென்னை பூந்தமல்லி அருகே படமாக்கப்பட்டு வந்தது. இந்த சண்டை காட்சியில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சூர்யாவின் தோள்பட்டையின் மீது எதிர்பாராத விதமாக கேமரா அறுந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த சூர்யாவை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துமனைக்கு படக் குழுவினர் அழைத்து சென்றிருக்கின்றனர். ஆனால் மருத்துவமனை மற்றும் படக்குழு தரப்பில் இருந்து சூர்யாவின் உடல்நிலை குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாததால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Exit mobile version