Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வைகைப்புயல், தானே தயாரித்தும் நடித்து இருக்கும் வெப் சீரிஸ், அதோட பேர கேட்டாலே சிரிப்பு வருது!

தமிழ் சினிமாவில் காமெடிக்கு என பெயர் போன வைகைப்புயல் வடிவேலு தனது நடிப்பில் மட்டுமல்லாமல் உடல் அசைவின் மூலம் மக்களை சிரிக்க வைப்பதில் கெட்டிக்காரர். சில வருடங்களாக கதாநாயகனாக நடித்து வரும் வடிவேலு தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.

அவர் நடித்த கதாபாத்திரங்கள் பெயரானது மக்களின் மனதில் இடம் பெறும் அளவிற்கு பெரிதும் ஈர்க்கப்படும். எடுத்துக்காட்டாக நாய் சேகர், ஏட்டு ஏகாம்பரம், கைப்புள்ள.

தற்பொழுது, இயக்குனர் சுராஜ் கூட்டணியில் வடிவேலே தயாரிப்பு நடிக்க இருக்கும் வெப் சீரியல் ஒன்றினை உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த வெப்சீரிஸ் பேய் சேகர் என பெயர் வைத்துள்ளார்களாம். நாய் சேகர் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பின வடிவேலு தற்போது பேய் சேகர் கதாபாத்திரத்தில் திகில் கலந்த காமெடி கதையில் மிரட்ட போகிறாராம்.

அதற்காக நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களிடம் அவரே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சுராஜ் விகடனுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

 

Exit mobile version