நடிகர் வடிவேலு-வால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் ஆரம்பம்!!..
நடிகர் வைகைப்புயல் வடிவேலு அவர்களால் வாழ்ந்தவர்களை விட, பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் அதிகரித்தே போகிறது.
இயக்குநரும், நடிகருமான ராஜ்கிரண் அவர்களின் அலுவலக உதவியாளராகச் சேர்ந்த வடிவேலு அவர்கள், சிறிது,சிறிதாக முன்னேறி தமிழ் சினிமாவில் மாபெரும் முத்திரையை பதித்துள்ளார். அவர் நிறையத் துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் திரைத்துறையில் உச்சத்தைத் தொட்டுள்ளார்.
ராஜ்கிரண் அவர்கள் இயக்கத்திலும், கஸ்தூரி ராஜா அவர்களின் இயக்கத்திலும், சிறு- சிறு பாத்திரங்களில் நடித்து வந்த வைகைப்புயல் வடிவேலு அவர்கள் நடிகர் விஜயகாந்த் அவர்கள் நடித்த சின்னக்கவுண்டர் படத்தில் குடைபிடிக்கும் நபராக நடித்து மக்கள் மத்தியில் நன்கு பரிச்சியமானார். பிறகு அடுத்தடுத்து படங்களின் நடித்துச் சிறு, சிறு வெற்றிகளை அடைந்தார். 1994 ஆம் ஆண்டு வெளியான காதலன் படத்தின் மூலம் முழு நீள நகைச்சுவை பாத்திரம் ஏற்று நடித்து. அதில் வெற்றி கண்டார். அதன்பிறகு நடிகர் வடிவேலு அவர்கள் தொடர்ந்து பல படங்களில் நடித்து படம் முழுவதும் வரும் வாய்ப்பை பெற்றார்.
நடிகர் வடிவேலு அவர்கள் வைகைப்புயல் வடிவேலு-வாக உருமாறியதும் 90களில் இறுதியில் தான். பல படங்கள் அவர்களுக்காகவும் ஓடின.
லட்சக்கணக்கிலும், கோடிகளிலும் அவர் சம்பளமும் உயர்ந்தது புகழின் உச்சிக்கே சென்றார்.
ஆனால் இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்களைப் பற்றி மற்ற திரைப்படங்கள் நல்லதாகச் சொல்லவில்லை. பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். நடிகை சோனா உள்ளிட்ட சில துணை நடிகைகளை, நடிகர் வடிவேலு அவர்கள் இரவு நேரத்தில் தனியாக இருக்கும் போது தவறாக நடக்க முயன்றதாகவும், சில பெண்களை அவர் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. வடிவேல் அவர்களுடன் நடிக்கும் நகைச்சுவை கலைஞர்களும் அவர் யாரையும் வளர விட மாட்டார், தன் கட்டுப்பாட்டில் உள்ளே தான் சிறு-சிறு நடிகர்களையும் வைத்திருப்பார் என்றும் குற்றம் சுமத்துகின்றனர்.
தமிழ் திரைத்துறை வட்டாரங்களில் கூட நடிகர் வடிவேலு அவர்களால் பாதிக்கப்பட்டோரின் பட்டியல் பெரியது என்றும் வடிவேலு அவர்கள் உச்சத்தைத் தொட்டதும் பழையவற்றை எல்லாம் மறந்துவிட்டார் என்றும் அவர் யாரையும் மதிப்பதில்லை என்றும் ஒரு பேச்சு இன்றுவரை கோடம்பாக்கத்தில் உலா வருவது குறிப்பிடத்தக்கது.
விரைவில் நடிகர் வடிவேலு-வால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் என்று கோலிவுட் வட்டாரத்தில் ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.