நடிகர் கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக தனது இரண்டாவது படமே தளபதி விஜய்யுடனும், மூன்றாவது படம் உலக நாயகன் கமலஹாசனுடன் என தமிழ் சினிமாவை வியப்பில் ஆழ்த்தி விட்டார்.
கைதி என்னும் வித்தியாசமான கதைக்களத்துடன் வந்த லோகேஷ் மாஸ்டர் படத்தில் நாம் இதுவரை பார்த்திராத தளபதியை நம் கண்களுக்கு விருந்தளித்தார்.
விஜய்க்கு விஜய்சேதுபதியை வில்லனாக கொண்டு வந்து மிகப்பெரிய அதிரடியை நடத்தினார். JD மற்றும் பவானியின் தாக்கம் நம் மனதில் இருந்து நீங்கவே இன்னும் பல காலங்கள் எடுக்கும். அனிருத் இசையமைப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் ‘வாத்தி ரைடு’, ‘குட்டி ஸ்டோரி’ பாடல்களுக்கு ஆடாத கால்கள் இல்லை என்றே சொல்லலாம்.
தற்பொழுது லோகேஷ் கனகராஜ் உலக நாயன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்னும் திரைப்படத்தை இயக்கி கொண்டிருக்கிறார்.
தளபதி விஜய், ‘கோலமாவு கோகிலா’, மற்றும் தற்போது திரையரங்குகளில் பட்டை கிளப்பும் ‘டாக்டர் ‘ திரைப்படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதன் பிறகு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 நடிக்கவிருக்கிறார்.
தற்போது தளபதி 67 பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன.
அதாவது தளபதி 67ல் விஜயும் லோகேஷ் கனகராஜும் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதைப்பற்றி இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.