Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தாயின் ஆசைக்காக கோவில் கட்டி கொடுத்த நடிகர் விஜய்!

#image_title

தாயின் ஆசைக்காக கோவில் கட்டி கொடுத்த நடிகர் விஜய்!

நடிகர் விஜய் சமீபத்தில் சாய்பாபா கோவில் ஒன்றில் தரிசனம் செய்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தன. அதனை கண்ட பலரும் ஜோசப் விஜய் எப்படி சாய் பாபா கோவிலில்? இந்த கோவில் எங்கு உள்ளது? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி வெளியாகியுள்ளது.

அதாவது இந்த சாய் பாபா கோவில் சென்னையில் தான் உள்ளதாம். இதை நடிகர் விஜய் தான் அவரது சொந்த இடத்தில் கட்டி உள்ளாராம். இதனை கேட்ட விஜய் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர். நடிகர் விஜய்யின் அம்மா ஷோபனா சந்திரசேகர் திவிரமான சாய்பாபா பக்தையாம். எனவே அவருக்காக விஜய் இந்த கோவிலை கட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி சென்னை கொரட்டூரில் உள்ள விஜய்க்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. இதன் கட்டுமான பணிகள் நடந்த சமயத்தில் விஜய் அடிக்கடி இங்கு வந்து பார்வையிட்டதாக கூட சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு தனது தாய்க்காக விஜய் இந்த கோவிலை பார்த்து பார்த்து கட்டியுள்ளாராம்.

கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தான் இந்த கோவிலின் கிரகப்பிரவேசம் நடந்துள்ளது. அதில் நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் கூட தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

முன்னதாக விஜய்க்கு அவர் பெற்றோருடன் கருத்து வேறுபாடு எனவே பேச்சுவார்த்தை இல்லை என்பதுபோன்ற செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று தனது தாய்க்காக கோவில் கட்டி நடிகர் விஜய் அவரின் தாய்ப்பாசத்தை நிரூபித்துள்ளார்.

Exit mobile version