Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! நடிகர் விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு!

தமிழகத்தில் 21 மாநகராட்சி மற்றும் 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என்று ஒட்டுமொத்தமாக 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு தற்சமயம் நடைபெற்று வருகிறது.இந்த தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.

தேர்தல் ஆணையமும் வேட்ப்பாளர்களை மிகத்தீவைராமாக கண்கணித்து வந்தது இந்த வாக்குப்பதிவு ஆரம்பித்தது முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுடைய ஜனநாயக கடைமையையாற்றி வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தற்சமயம் தனது வாக்கை பதிவு செய்திருக்கிறார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு காரில் வந்திறங்கிய நடிகர் விஜய் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். நடிகர் விஜய் வாக்களிக்க வந்த போது அந்த பகுதியில் அவருடைய ரசிகர்கள் கூட்டமாக குவிய தொடங்கினார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version