Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசியலில் களமிறங்கும் நடிகர் விஜய்! 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்தான் குறிக்கோள்!!

#image_title

அரசியலில் களமிறங்கும் நடிகர் விஜய்! 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்தான் குறிக்கோள்!
2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் அவர்களின் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட மாணவர் அணி செயலாளர் அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது தமிழகத்தில் பெருத்த சந்தேகமாக இருக்கின்றது. எவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தான் நடித்த படங்கள் முலமாக அரசியலுக்கு வருவதை பற்றி பேசினாரோ அது மாதிரியே நடிகர் விஜய் அவர்களும் தான் நடிக்கும் சில படங்களில் அரசியல் பற்றி பேசுவது வழக்கம். இதையடுத்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் பேட்டியிட்டு பலர் வெற்றி பெற்றனர். இதையடுத்து விஜய் மக்கள் இயக்கம் சட்டப் பேரவை தேர்தலை குறிக்கோளாக வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து திருவாரூரில் பேட்டியளித்த விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஆனந்த் அவர்கள் “விஜய் அவர்களின் பிறந்த நாளுக்கு பிறகு மாற்றம் நிச்சயமாக வரும். 2026ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது. தொண்டர்கள் விருப்பம் போல் முடிவு எடுக்கப்படும். தற்போது தொகுதி வாரியாக அரசியல் நிலவரம் குறித்து கணக்கெடுத்து வருகிறோம்” என்று பேட்டியளித்துள்ளார்.
Exit mobile version