Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் உத்தரவின்படி நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கிய ரசிகர்கள்! இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

#SaveTheniFromNEUTRINO-News4 Tamil Latest Online Tamil News Today

#SaveTheniFromNEUTRINO-News4 Tamil Latest Online Tamil News Today

விஜய் உத்தரவின்படி நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கிய ரசிகர்கள்! இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

சமீபத்தில் நடந்த பிகில் ஆடியோ வெளியீட்டில் பேசிய நடிகர் விஜய், பேனர் விவகாரத்தில் அரசியல்வாதிகளை விமர்சித்து பேசிய அவர் மேலும் இது போன்ற சமூகப் பிரச்னைகளை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த வகையில் அவரின் உத்தரவை செயல்படுத்தும் நோக்கத்தில் தேனியை அமையவிருக்கும் நியூட்ரினோ திட்டத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. இந்தத் திட்டத்துக்கு பெரும்பாலான தமிழக அரசியல் தலைவர்கள்,சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதியை சார்ந்த கிராம மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தான் மேற்கு தொடர்ச்சி மலை, சூழலியல் சார்ந்து மிக முக்கிய பங்காற்றும் இந்தத் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், மத்திய அமைச்சரவையும் அனுமதி அளித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பிகில் ஆடியோ வெளியீட்டில் பேசிய நடிகர் விஜய், அரசியல்வாதிகள் வாய்த்த பேனர் விவகாரத்தில் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்ததை கண்டித்து பேசிய அவர் இது போன்ற சமூக பிரச்னைகளை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் ஆரம்பத்தில் சுபஸ்ரீ விவகாரத்துக்காக #justiceforsubasree என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். பின்னர், #keezhadiதமிழ்civilization என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்தனர். இந்தநிலையில் தற்போது தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ திட்டத்திலிருந்து பாதுகாக்க #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

https://twitter.com/ActorVijayTeam/status/1177141486674006016
https://twitter.com/MadhuraDharaoff/status/1177169775643914242
https://twitter.com/Aadhiranjith7/status/1177069950629888000

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Exit mobile version