Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் விஜய் அவர்களுக்கு அபராதம் விதிப்பு! காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை!!

நடிகர் விஜய் அவர்களுக்கு அபராதம் விதிப்பு! காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை!!

 

அண்மையில் நடைபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு  நடிகர் விஜய் அவர்களுக்கு அபராதம் விதித்து காவல் துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகர் விஜய் அவர்கள் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 234 தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகையும் விருதும் சான்றிதழும் வழங்கினார்.

 

அதன் பிறகு சமீபத்தில் பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடனும் நடிகர் விஜய் அவர்கள் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.  இந்த கூட்டம் முடிந்து வெளியே வந்த நிர்வாகிகள் நடிகர் விஜய் அவர்கள் சினிமாவில் நடிக்கப் போவது இல்லை எனவும் அரசியலில் ஈடுபடப் போவதாகவும் கூறினர்.

 

இதற்கு முன்பாக நடிகர் விஜய் அவர்கள் நீலங்கரையில் இருந்து பனையூர் இல்லத்திற்கு காரில் வந்தார். அப்போது வரும் வழியில் நடிகர் விஜய் வந்த கார் சிக்னலில் நிற்காமல் சென்றது. இந்த காட்சி அங்கு இருந்த போக்குவரத்து கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

 

இதையடுத்து போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சென்ற நடிகர் விஜய் அவர்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகர் விஜய் தற்பொழுது லியோ திரைப்படத்தில் அவருக்குரிய காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்துள்ளார். மேலும் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்திலும் அடுத்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version