வருகிற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிடுகிறார்? புதிய கட்சிப் பதிவு குறித்து அவரது தந்தை பேச்சுவார்த்தை

0
119

இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிதாக ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்வது தொடர்பாக மத்திய டெல்லியில் உள்ள வழக்கறிஞர் ஒருவரிடம் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை சினிமா துறையிலிருந்து எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பின் வாங்கவே தற்போது நடிகர் விஜய் அந்த முதல்வர் நாற்காலி மீது மோகம் கொண்டு உள்ளார்.

இவருக்கு முன்னதாகவே விஜயகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோர் அரசியல் களத்தில் இறங்கி விட்டனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சினிமா பிரபல நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது வாடிக்கையா ஆகிவிட்ட நிலையில் தற்போது நடிகர் விஜய் அரசியல் பிரவேசத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் புதிதாக கட்சி தொடங்குவது பற்றி சென்னையில் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் மத்திய தேர்தல் ஆணையத்தில் கட்சிப் பதிவு செய்வதில் அனுபவமிக்கவர், டெல்லியில் உள்ள வழக்கறிஞர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதுபற்றி முன்னதாகவே டெல்லியில் இருந்து வழக்கறிஞர் சிலர் சென்னைக்கு விமானம் மூலம் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எஸ் ஏ சந்திரசேகரன் உடன் சென்னையில் கட்சி தொடங்குவது பற்றிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எஸ் ஏ சந்திரசேகரன் மட்டுமே பங்கேற்றிருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதன் மூலம் நடிகர் விஜய் தற்போது அரசியலில் நின்று, வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய், தற்போது வெளிவரும் அவரது படங்களில் அரசியல் கலந்த கருத்துக்கள் வெளி வருவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் புதியவர்களுக்கு ஏற்றதாக இருக்கும் எனவும்,

அரசியல் பிரவேசத்தின் மூலமாக, வெளியாகும் தனது திரைப்படங்களை வணிக ரீதியாக வெற்றி அடையச் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்’ என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.