காமராஜர் பிறந்த நாள் நடிகர் ‘விஜய் பயிலகம்’!! சட்டசபை 234 தொகுதிகளிளும் திறப்பு!!
நடிகர் விஜய் தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் இரவு நேர படச்சாலையை’விஜய் பயிலகம்’ என்ற பெயரில் துவக்கி வைக்கிறார்.
காமராஜரின் 121 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜய் அவர்கள் மூலம் இரவு நேர பாடசாலையானது தொடங்கி வைக்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஜூன் 17 ல் தமிழகத்தில் உள்ள 10 மற்றும் 12 வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பொது தேர்வில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 1600 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் சான்றிதழையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தான் நடிகர் விஜய் 234 தொகுதிகளிலும் இரவு நேர படச்சாலையை காமராஜர் பிறந்தநாளான இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்த இரவு படச்சாலை திட்டத்திற்க்கு படிப்பகம், பயிலகம்,கல்வியகம் என்ற பல பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது. தளபதி ரசிகர்கள் சார்பாக பயிலகம் என்ற பெயர் முடிவு செய்ய பட்டுள்ளது.
அம்பேத்கர் பிறந்தநாளின் போது 234 தொகுதிகளிலும் அவருடைய திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து 234 தொகுதிகளிலும் பட்டினி தினத்தையொட்டி மக்களுக்கு வயிறார சாப்பிட மதிய உணவை அளிக்க சொல்லி ரசிகர் மன்றத்தின் மூலம் நிறைவேற்றினார்.
அதை தொடர்ந்து காமராஜர் பிறந்தநாளன இன்று அவர் உருவ சிலைக்கு மாலை அணிவிக்க அறிவுறுத்தி உள்ளார்.இந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டிருக்கிறார்.
இந்த இரவுநேர பாடச்ச்சலை திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த அடுத்தடுத்த நகர்வு விஜயின் தேர்தல் களத்தில் குதிப்பதற்கான ஆயத்தமாக பார்க்கப்படுகிறது.