‘தளபதி 67’ படத்தை வைத்து பலே திட்டம் போட்டிருக்கும் நடிகர் விஜய் !

0
148

லோகேஷ்-விஜய் கூட்டணியில் உருவாகவுள்ள ‘தளபதி 67’ படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில் இப்படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஜய், இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி விவரிக்க வேண்டிய தேவையில்லை. நடிகர் விஜய்யின் வெளியாவதற்கு முன்னரிலிருந்தே படத்தை பற்றிய ஹைப் ரசிகர்களிடம் இருந்துவரும், அதிலும் அவரது படங்கள் வெளியானால் சொல்லவா வேண்டும், திரையரங்குகளே விழாக்கோலமாக தான் காட்சியளிக்கும். விஜய்யின் நடன அசைவு, நடிப்பு, நகைச்சுவை திறன் என அனைத்தையும் ரசிகர்கள் அணுவணுவாக ரசித்து கொண்டிருக்கின்றனர் என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்று தான். தற்போது நடிகர் விஜய் விஜய் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தின் நடித்து வருகிறார். குடும்ப கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு , ஷாம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஸ்ரீகாந்த், கணேஷ் வெங்கட்ராமன், குஷ்பூ, சங்கீதா மற்றும் ஜெயசுதா போன்ற பலர் நடித்துள்ளனர்.

‘வாரிசு’ படத்தை காட்டிலும் ரசிகர்கள் என்னவோ எதிர்பார்த்து கொண்டிருப்பது ‘தளபதி 67’ படத்தை பற்றி தான், இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் ‘தளபதி 67’ படத்தை லோகேஷ் இயக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மீண்டும் லோகேஷ்-விஜய் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில் இப்படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ‘வாரிசு’ படம் வரை குறிப்பிட்ட அளவு சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த விஜய் தற்போது தனது அடுத்த படத்தில் சம்பள யுக்தியை மாற்றப்போவதாக கூறப்படுகிறது.

அதாவது பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் சில நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படத்தை தானே தயாரித்து அந்த படத்தின் லாபத்தில் சரிபாதி தொகையை சம்பளமாக பெற்று வருகின்றனர். இந்த முறையை தான் தற்போது நடிகர் விஜய்யும் பின்பற்ற போகிறாராம், தான் நடிக்கப்போகும் ‘தளபதி 67’ படத்திற்கு ஆரம்பத்தில் சம்பளம் எதுவும் வாங்காமல் படத்தின் லாபத்தில் சரிபாதியை தனது சம்பளமாக பெற திட்டம் தீட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கிட்டத்தட்ட ரூ.100 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.