Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வராக பதவியேற்கிறார் நடிகர் விஜய்!!! மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் இணையத்தில் வைரல்!!!

#image_title

முதல்வராக பதவியேற்கிறார் நடிகர் விஜய்!!! மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் இணையத்தில் வைரல்!!!

நடிகர் விஜய் அவர்கள் முதல்வராக பதவியேற்பது போல போஸ்டர் அடிக்கப்பட்டு மதுரையில் நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வேகமாக வைரலாக பரவி வருகின்றது.

நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான வேலைகள் ஒரு புறம் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.

அரசியலுக்கு வருவதற்காக பல முன்னேற்பாடுகளை நடிகர் விஜய் அவர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக செய்து வருகிறார். தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மூலமாக மாலை அணிவிப்பது, ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உணவு உள்ளிட்ட பல நலத்திட்டங்களை வழங்குவது, கண் தானம், ரத்த தானம் ஆகிய முகாம்களை நடத்துவது, மாணவர்களுக்கு இரவு நேர பாடகசாலை என்று பல உதவிகளை நடிகர் விஜய் அவர்கள் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மூலமாக செய்து வருகின்றார். மேலும் மருத்துவ முகாம் நடத்துவது குறித்த ஆலோசனை நடந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஒட்டப்படும் நடிகர் விஜய் தொடர்பான அரசியல் போஸ்டர்கள் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது மதுரையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

அதாவது 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் நடிகர் விஜய் வெற்றி பெற்றதாகவும் பிரதமர் மோடி அவர்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவிப்பதாகவும் உள்ளது. மேலும் அந்த போஸ்டரில் அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் முதலமைச்சராக பதவியேற்றார் நடிகர் விஜய் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிப்பது போல உள்ளது.

மேலும் நடிகர் விஜய் அவர்களுடன் ஜிகே.வாசன், ஒ.பன்னீர் செல்வம், அன்புமணி ராமதாஸ், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் இந்த போஸ்டரில் இருப்பது போல போஸ்டர் அச்சடிக்கப்பட்டு இருக்கின்றது.

மேலும் தினத்தந்தி நாளிதழில் முதல் பாகத்தில் இந்த செய்தி வருவது போல அச்சடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் “2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் கட்சி அமோகம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது”, “மத்தியில் மோடியின் நல்லாட்சி மாநிலத்தில் விஜய்யின் மக்களாட்சி என்று மக்கள் பேச்சு”, “தொலைப்பேசியில் பாரதப் பிரதமர் விஜய்க்கு வாழ்த்து பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்”, “தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்தது என்று பொதுமக்கள் பேட்டி”, “கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் பொது மக்களுக்கும் நன்றி தெரிவித்தார் விஜய்”, “தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தொண்டர்கள் உற்சாகம்” ஆகிய வாக்கியங்கள் இடம் பெற்று உள்ளது. தற்பொழுது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Exit mobile version