அரசியலில் அடுத்த கட்டத்தை நோக்கி நடிகர் விஜயின் செயல்!! 234 தொகுதிகளுக்கும் அனல் பறக்கும் சலுகை!!
நடிகர் விஜய் அவர்களின் மக்கள் இயக்கத்தின் மூலமாக 234 தொகுதிகளிலும் உள்ள மக்களுக்கு ஒரு சிறப்பான உதவியை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் மே 28ம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து நடிகர் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் மூலமாக 234 தொகுதிகளிலும் உள்ள மக்களுக்கு மதிய உணவை வழங்கவுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் அவர்கள் ஏற்கனவே மாவட்டம் தோறும் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இதையடுத்து நடிகர் விஜய் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மதிய உணவு வழங்கவுள்ளதை அடுத்து நடிகர் விஜய் அரசியலில் இறங்குவதற்கு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில் “உலகம் முழுவதும் மே 28ம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. நடிகர் விஜய் அவர்களின் சொல்லுக்கு இணங்க உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசி எனும் பிணியை போக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வருகின்ற மே 28ம் தேதி காலை 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையில் ஒரு வேளை உணவு வழங்கப்படவுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் ஒருவேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.