Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல தயாரிப்பாளர் R.B சௌத்ரி மீது நடிகர் விஷால் பரபரப்பு புகார்!

பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியின் மீது நடிகர் விஷால் தி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது, சினிமா வட்டாரங்களுக்கு இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ் சினிமாவில் பெரிய மற்றும் மூத்த தயாரிப்பாளர் என்றால் R.B சவுத்ரி அவர்களை சொல்லலாம். இவர் தயாரித்த எத்தனையோ எண்ணற்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது.

 

இந்நிலையில் ஆர்பி சவுத்ரி மீது விஷால் திநகரில் உள்ள காவல் நிலையத்தில் தீ நகர் துணை கமிஷனர் ஹரிஹரன் பிரசாந்த் இடம் புகார் மனு அளித்துள்ளார்.

 

நடிகர் விஷால் அந்த புகார் மனுவில் கூறியதாவது, ” நான் சமீபத்தில் தயாரித்த ஒரு படத்திற்காக பணத் தேவை இருந்தது, அதை பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான ஆர்பி சவுத்ரி இடம் கேட்டு வாங்கினேன். அந்தப் பணத்தை கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி திருப்பிக் கொடுத்துவிட்டேன். நான் வாங்கிய கடனுக்காக நான் கையெழுத்திட சில ஆவணங்களை கொடுத்தேன். அந்த ஆவணங்களை திருப்பி கேட்ட பொழுது அவர் தர மறுக்கிறார். இதுகுறித்து நான் கேட்ட பொழுது உறுதிமொழி பத்திரம் தொலைந்துவிட்டது என்று கூறுகின்றனர். அந்த ஆவணங்களை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தக் கூடும் என்பதால் அவற்றைத் திரும்பப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்”. என நடிகர் விஷால் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

நடிகர் விஷால் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். எவ்வளவு பணம் வாங்கப்பட்டது, திருப்பி கொடுக்கப்பட்டது, என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்கபட்டது போன்ற எந்த விபரங்களும் புகாரில் இல்லை.

 

 

Exit mobile version