Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெற்றிடம் உண்மை தான்! ஆனால் யாராலும் நிரப்ப முடியாது: நடிகர் விவேக்

வெற்றிடம் உண்மை தான்! ஆனால் யாராலும் நிரப்ப முடியாது: நடிகர் விவேக்

வெற்றிடம் இருப்பது உண்மைதான் ஆனால் அதை யாராலும் நிரப்ப முடியாது என நடிகர் விவேக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தற்கால சினிமாக்களில் நகைச்சுவை என்பது பிறரது மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், உருவத்தை வைத்து கேலி செய்யும் நகைச்சுவைகள் அதிகம் இடம் பெறுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருப்பதாக கூறிய கருத்துக்கு நடிகர் விவேக் கூறியதாவது:

கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் அவர்களின் காலத்தில் நகைச்சுவை என்பது நகைச்சுவையாக மட்டுமின்றி சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இருந்தது. மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை உள்பட பல விஷயங்களை அவர் நகைச்சுவை கலந்து கொடுத்தார். ஆனால் அதே போல அனைத்து காமெடி நடிகர்களும் செய்ய முடியாது. ஏனெனில் கலைவாணர் என்றால் ஒரே ஒரு கலைவாணர் தான். அவரைப் போல் இன்னொருவர் செய்தால் அது காப்பி அடித்து செய்த மாதிரி ஆகிவிடும். என்னை சின்ன கலைவாணர் என்று சிலர் கூறினாலும் அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவர் இருக்கும் உயரம் வேறு என்னுடைய இடம் வேறு என்று விவேக் கூறினார்

மேலும் ஒவ்வொரு காமெடி நடிகரும் அந்தந்த காலத்திற்கேற்ப புதிய ட்ரெண்டுக்கு ஏற்றவாறு காமெடி செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போதைய டிரெண்ட்டில் இன்றைய காமெடி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதனை குற்றம் சொல்ல முடியாது. முன்பெல்லாம் ஒரு சில செய்தியாளர்கள் மட்டுமே இருந்தார்கள். ஆனால் தற்போது செல்போன் இருக்கிற எல்லோருமே செய்தியாளர்களாக உள்ளனர். எனவே காலத்திற்கு தகுந்த மாதிரியும் காமெடி நடிகர்களும் மாறி உள்ளனர்

அதே நேரத்தில் என்எஸ் கிருஷ்ணன் போன்ற தரமான காமெடியை கொடுப்பதில் தமிழ் சினிமாவில் வெற்றிடம் இருப்பது உண்மைதான். ஆனால் அந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று கூறினார்

மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த தமிழ் திரைப்படங்களில் காமெடிக்கு என ஒரு தனி ட்ராக் இருக்கும். தற்போது ஒரு திரைப்படம் 2 மணி நேரம் மட்டுமே உருவாக்கப்படுவதால் காமெடிக்கு என தனி ட்ராக் இல்லை. இனிமேல் காமெடி ட்ராக்குகளை இயக்குனர்கள் உருவாக்கினால் தரமான காமெடிகள் வர வாய்ப்பு உள்ளது’ என்று விவேக் கூறினார்

Exit mobile version