விஜய் கட்சியில் இணைந்த நடிகர்.. மாரி செல்வராஜின் தூத்துக்குடி வாழை..

0
121
Actor who joined Vijay party.. Mari Selvaraj's Thoothukudi Vazai..

த.வெ.க : நடிகர் விஜய் அவர்களால் “தமிழக வெற்றிக் கழகம்”, என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டு, அதன் முதல் மாநாடு கடந்த “அக்டோபர் மாதம்” நடந்தது. அவர் மேடையில் பேசிய பேச்சுக்கள், மக்கள் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தனது “கடைசி படத்தில்” நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் மாநாட்டை நடத்தி முடிந்ததிலிருந்து இவரது கட்சியில் பலர் தொடர்ந்து சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள். மாற்று கட்சியிலிருந்தும், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்து வருகின்றனர். வருகின்ற “2026 சட்டமன்ற” தேர்தலை நோக்கி விஜய் அவர்கள் பயணத்தை தொடங்கியுள்ளார். அதற்காக பல முன் ஏற்பாடுகளையும், வியூகங்களும் அமைத்து அதற்கேற்ப அரசியலில் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். அனைத்து ஊர்களிலும் கட்சியை பலப்படுத்தும் விதமாக, அடிப்படை கட்டமைப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் “2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர்” என “100க்கும்” மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை நியமிக்க உள்ளதாகவும், அதற்கான பணிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் “ஆனந்த்” அவர்கள் செய்து வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் “மாரி செல்வராஜ்” இயக்கத்தில் வெளிவந்த “வாழை” திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மக்கள் மனங்களில் “சிவனைந்தானக” இடம் பிடித்த “பொன்வேல்”, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துள்ளார். தூத்துக்குடி தமிழக வெற்றிக் கழக, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் இணைந்த அவருக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் என்ற அட்டை வழங்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.