யாருடைய கட்சியிலும் இணையாமல் தனக்கென தனி கட்சியினை நிறுவிய நடிகர் மற்றும் அரசியல் தலைவர்கள்!!

0
121
Actors and political leaders who founded their own party without joining any party!!

எம் ஜி ராமச்சந்திரன் :-

கட்சி பெயர் : அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
தொடங்கப்பட்ட ஆண்டு : 1972
கட்சியின் முக்கிய செயல்பாடுகள் :-

✓ அரிசி விலை குறைப்பு
✓சென்னைக்கு குடிநீர் திட்டம்
✓அண்ணா பல்கலைக் கழகம்
✓அண்ணா வளைவு

சிவாஜி கணேசன் :-

கட்சி பெயர் : தமிழக முன்னேற்ற முன்னணி
தொடங்கப்பட்ட ஆண்டு : 1988
குறிப்பு : சிவாஜியின் ஆரம்ப கால அடையாளம் திராவிட இயக்கம்தான். நாடக மேடைகளுக்கு அடுத்து, அவரைத் திராவிடர் கழகப் பிரச்சார மேடைகளில்தான் அதிகம் பார்க்க முடியும்.

கே பாக்யராஜ் :-

கட்சி பெயர் : எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம்
ஆண்டு : 1989

விஜயகாந்த் :-

கட்சி பெயர் : தேசிய முற்போக்கு திராவிட கழகம்
ஆண்டு : 2005
குறிப்பு : தேமுதிக கட்சியை ஆரம்பித்த 6 ஆண்டுகளிலேயே எதிக்கட்சித் தலைவராக விஜயகாந்த் உயரத்தை தொட்டார்.

சரத்குமார் :-

கட்சி பெயர் : அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
ஆண்டு : 2007
குறிப்பு : 12 மார்ச் 2024 அன்று, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அதன் நிறுவனர் சரத்குமாரால் பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட்டது.

கருணாஸ் :-

கட்சி பெயர் : முக்குலத்தோர் புலிப்படை
குறிப்பு : 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

சீமான் :-

கட்சி பெயர் : நாம் தமிழர் கட்சி
ஆண்டு : 2010
குறிப்பு : தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த “நாம் தமிழர் இயக்கத்தின்” தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி.

கமலஹாசன் :-

கட்சி பெயர் : மக்கள் நீதி மையம்
ஆண்டு : 2018
குறிப்பு : இந்த கட்சியின் கொடியானது ஆறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கைகளால் குறிக்கப்படுகிறது, இது இந்தியாவின் தென் மாநிலங்களுக்கு (ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் ) இடையிலான ஒத்துழைப்பைக் குறிக்கும்.

விஜய் :-

கட்சி பெயர் : தமிழக வெற்றிக் கழகம்
ஆண்டு : 2024
குறிப்பு : 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் அவரது கூட்டணி கட்சித் தலைவர்களையும் ஆதரித்து விஜய் மற்றும் அவரது தந்தை சந்திரசேகரும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.