Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொது முடக்கத்தை மீறி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று சிக்கிக் கொண்ட பிரபல நடிகர்கள்

Actors Travelled in Lockdown Period

Actors Travelled in Lockdown Period

கொடைக்கானலின் பொது முடக்கத்தை மீறி பேரிஜம் வனப்பகுதிக்கு சுற்றுலா சென்ற நடிகர்கள் சூரி, விமல் மற்றும் இயக்குனர்களுக்கு வனத்துறை அபராதம் விதித்துள்ளது.மேலும் இரண்டு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக பொது முடக்கம் அமலில் உள்ளது. எனவே ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு அரசுத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

vimal and soori

இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி கொடைக்கானல்  வனப்பகுதியின் கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரி பகுதிக்கு நடிகர்கள் விமல் சூரி மற்றும் இயக்குனர்கள் இரண்டு பேர் உள்ளிட்ட சிலர் அனுமதியின்றி சென்று தங்கி உள்ளனர்.

அப்பகுதியில் திரைப்பட துறையினருடன்  சேர்ந்து வணபணியாளர்களும் புகைப்படம் எடுத்துள்ளனர். அங்கு அவர்கள் ஏரியில் மீன் பிடித்துமகிழ்ந்தது மட்டுமல்லாமல் செல்பி  எடுத்துள்ளனர். 

vimal and soori

இந்தப்படம் புதன்கிழமை சமூகவலைதளத்தில் வெளியானதையடுத்து அரசு உத்தரவை மீறி வனப்பகுதிக்குள் சென்றவர் மீதும், அவர்களுக்கு உதவி செய்த வனத்துறை அதிகாரிகள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேத்துப்பாறையை சேர்ந்த சமூக ஆர்வலர் மகேந்திரன் புதன்கிழமை கொடைக்கானல் காவல்துறை கண்காணிப்பாளர் ஆத்மநாதனிடம் புகார் கொடுத்துள்ளார்.

vimal and soori

 இதுகுறித்து வனத்துறை ரேஞ்சர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 “கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் கடந்த 17ஆம் தேதி நடிகர்கள் விமல் சூரி மற்றும் சிலர் தங்கி இருந்துள்ளனர் அனுமதி இல்லாமல் பேரிஜம் ஏரிக்கு சென்று மீன் பிடித்த காரணத்திற்காக ரூபாய் நான்காயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வனப் பணியாளர்கள் சைமன் பிரபு, செல்வம் ஆகிய இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இச்சம்பவத்தைக் குறித்து மற்ற  வனப்பணியாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

Exit mobile version