Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் – கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!!

#image_title

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் – கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!!

90ஸ் கால கட்டத்தில் தன் இடுப்பு அழகால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்து நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இவரது நடிப்பு, நடனம், அழகு ரசிகர்களை சுண்டி இழுத்தார். தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, விஜய், அஜித், பிரசாந்த், பிரபுதேவா, சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினால், வாலி உட்பட படங்கள் இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமாகும்.

மும்பையில் பிறந்த சிம்ரன், பஞ்சாபி, ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் உட்பட பல மொழிகளில் பேசுவார். தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து செய்தார் சிம்ரன். இத்தம்பதிக்கு அதீப் மற்றும் ஆதித் என்ற இரு மகன்கள் உள்ளனர். நெடு ஆண்டுகளுக்கு பிறகு சிம்ரன் தமிழ் சினிமாவில் என்ட்ரியாகி குணசித்திர கதாப்பாத்திரத்திலும், தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் நடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் மட்டும் 10 விருதுகளை சிம்ரன் வென்றுள்ளார். அதில் 4 பிலிம்பேர் விருதுகள் மற்றும் 9 பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நடிகை சிம்ரனுக்கு திருமணத்திற்கு முன்பு 3 காதல் தோல்விகளை கண்டாராம். முதல் காதல் நடிகர் அப்பாஸ்ஸாம். அடுத்து டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம், இவருக்கு பின்னர் நடிகர் கமல் ஹாசன். இதில் ராஜு சுந்தரம் உடன் நெருக்கமாக பழகி திருமணம் வரை சென்றதாம். ஆனால், பெற்றோர்கள் சம்மதிக்காததால் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனராம். கமலுடன் சிம்ரன் லிவிங் ரிலேஷன்ஷிப்பிலிருந்து ஏமாற்றப்பட்டாராம். அப்பாஸை சிம்ரன் ஒருதலையாகத்தான் காதலித்தாராம்.

Exit mobile version