சினிமாவில் நடிக்க வேண்டும் இயக்குநராக வேண்டும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் போலீஸ் வேலையை வேண்டாம் என்று கூறிய நடிகர்கள் யார். யார் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
* நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்னர் படிப்படியாக வளர்ந்து தற்பொழுது பிரபல நடிகராக மாறி இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் தந்தை ஒரு போலீஸ். அவருடைய தந்தை இறந்த பின்னர் அவருடைய வேலை நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு வாரிசு அடிப்படையில் கிடைக்க அதை வேண்டாம் என்று கூறி சினிமாவில் நடிக்க வந்தார். தற்பொழுது பிரபல நடிகராக இருக்கிறார்.
* நடிகர் இயக்குநர் என்று அறியப்படும் இயக்குநர் தமிழ் அவர்கள் ஜெய் பீம் திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் அசுரன், விடுதலை, வடக்குபட்டி ராமசாமி ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருப்பார். மேலும் இயக்குநரான தமிழ் அவர்கள் டாணாக்காரன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக 12 ஆண்டுகள் போலீசாக பணியாற்றியுள்ளார். சின்ன வயதில் இருந்தே சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையால் 12 ஆண்டுகளாக பணியாற்றிய போலீஸ் வேலையை விட்டு இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
* தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வரும் நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் கடைசியாக வெளிவந்த இந்தியன் 2 திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்னர் இந்திய விமானப் படையில் வேலை செய்து வந்தார். சினிமா மீது இருந்த ஆர்வத்தில் டெல்லி கணேஷ் அவர்கள் 1964 முதல் 1974 வரை பத்து ஆண்டுகள் இந்திய விமானப் படையில் செய்த வேலையை நிராகரித்து சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
* மறைந்த பழம்பெரும் நடிகரான வினுச்சக்கரவர்த்தி அவர்கள் வில்லன், காமெடி, குணச்சித்திரம் என்று எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் மிகச்சிறப்பாக நடிக்கும் திறமை கொண்டவர். இவரும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய போலீஸ் வேலையை விட்டு விலகினார். நடிகர் வினுச்சக்கரவர்த்தி அவர்கள் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டர் வேலையில் இருந்தார்.
* நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்று பல திறமைகளை கொண்ட நடிகர் நாசர் எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடித்துக் கொடுப்பார். இவருக்கும் சிறு வயதில் இருந்தே சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்த காரணத்தினால் இந்திய விமானப் படையில் இருந்து தன்னுடைய வேலையை நிராகரித்து தமிழ்நாடு ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து நடிப்பை கற்றுக் கொண்டார். பின்னர் சினிமாவில் இணைந்து நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பிரபலமாக வளர்ந்துள்ளார்.