Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Muthu Movie: ரஜினியின் நண்பனாக நடிக்க இருந்த பிரபல நடிகர்.. அந்த காரணத்தால் தான் விலகினேன்..!

Muthu Movie

#image_title

Muthu Movie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் முத்து. இந்த திரைப்படத்தை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிருப்பார். இந்த படத்தில் நடிகர் ரஜினியிக்கு ஜோடியாக கண்ணழகி மீனா நடித்திருப்பார். 25 ஆண்டுகளையும் தாண்டி தற்போதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்தால் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்த்து ரசிக்கும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்த திரைப்படம் தான் முத்து.

இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 80 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஹஸ்புல்லாகி ஓடிக்கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஜப்பானில் வெளியாகி இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஜப்பானிய மொழியில் வெளிவந்த ஒரு இந்திய திரைப்படம் என்றால் அது முத்து திரைப்படம் தான். இந்த திரைப்படம் ஜப்பானில் அதிக வசூல் செய்தது. அந்த படம் வெளியாகி ஜப்பானில் ரஜினிக்கு அதிக மக்கள் ரசிகர்களாக இருந்தனர்.

இந்நிலையில் ரஜினி நடித்த முத்து திரைப்படத்தில் நண்பனாக அதாவது எஜமான் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அரவிந்த் சாமியை நாடியுள்ளார்கள். ஆனால் அந்த படத்தில் ரஜினியை அறைவது போன்ற காட்சி இடம் பெற்று இருந்ததால் அவர் மறுத்துவிட்டதாகவும், அதோடு ரஜினியின் தீவிர ரசிகராக அவர் இருந்ததால் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்று தகவலும் வெளிவந்தது. இதனை தொடர்ந்து அப்போதைய மளையாளத்தில் சிறந்த நடிகராக வலம் வந்தவர் தான் ஜெயராம். இவரும் ரஜினியை அடிக்கும் காட்சிக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும், அந்த காட்சியை மாற்ற சொல்லியதால் அவரும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாக தகவல் வெளிவந்தன.

இந்நிலையில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிகர் சரத்பாபுவை நடிக்க கூறியதாகவும், இருவரும் நண்பர்கள் என்பதால் இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார் என்று தெரிவித்தாராம்.

மேலும் படிக்க: படையப்பா படத்தில் நடிக்க ஆசைப்பட்ட தளபதி..! ஆனாலும் நிறைவேறிய கனவு..!

Exit mobile version