வாரிசு நடிகருக்கு வாரிசு நடிகர்களே பிரச்சனையா?

0
130

சமீபகாலமாகவே சினிமா துறையில், குடும்ப அரசியலை போலவே, ஒரே குடும்பத்தை  சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்தி பிறருக்கு வாய்ப்பு கிடைக்கவே கூடாது என்ற எண்ணத்தில் தெளிவாக உள்ளனர்.

இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பாலிவுட் முதல் கோலிவுட் வரை இதற்கு பிரச்சனைக்கு பஞ்சமில்லை. பெரும்பாலாக மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் வாரிசு நடிகர்கள் தான் அதிகம் இருக்கின்றனர்.

ஆனால்  தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பெரும்பாலான நடிகர்கள் தங்கள் கையைக் கொண்டே கரணம் வைத்துள்ளனர் எடுத்துக்காட்டாக விக்ரம், ரஜினி, அஜித் இன்னும் பலர். 

இதற்கு மாறாக வாரிசு நடிகர்கள் பின்னணியில் வந்த நடிகர்கள்  பலரும் முன்னணி நடிகர்களாக மாற முடியவில்லை. வெகுசிலரே மட்டும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டனர். அதில் விஜய், தனுஷ், சூர்யா, கார்த்தி ஆகியோரை  குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இந்த சூழ்நிலையில்  தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராக பாக்கியராஜின் மகன் சாந்தனு, தனது,ட்விட்டர் பக்கத்தில்  “வாரிசு கலாச்சாரம் என்பதைவிட ஒரு குறிப்பிட்ட குரூப், ஒரு சிலர் மட்டுமே புகழ் பெற வேண்டும் எனவும், அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள் “ என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நடராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “பாலிவுட்டில் மட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் ஒரு குறிப்பிட்ட வாரிசு அராஜகம் இருந்து கொண்டே தான் இருக்கிறது” என்று பதிவிட்டார். வாரிசு நடிகருக்கு வாரிசு நடிகர்களே பிரச்சனையா? என்று சாந்தனுவை, மறைமுகமாக சமூக வலைதளங்களில் கிண்டல் அடிக்கின்றனர்.