நடிகை எமி ஜாக்சனுக்கு திருமணம்… பிரபல நடிகர் தான் மாப்பிள்ளை…!

0
74

நடிகை எமி ஜாக்சனுக்கு திருமணம்… பிரபல நடிகர் தான் மாப்பிள்ளை…

 

பிரபல நடிகை எமி ஜாக்சன் அவர்களின் திருமணம் குறித்தும் மாப்பிள்ளை யார் என்பது பற்றியும் எமி ஜாக்சன் அவர்கள் அவர்களுடயை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

தமிழில் நடிகர் ஆரியா நடிப்பில் வெளியா மதராசப்பட்டினம் படம் மூலமாக நடிகையாக அறிமுகமான நடிகை எமி ஜாக்சன் அவர்கள் பின்னர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தாண்டவம், இயக்குநர் ஷங்கர் இயக்கி சியான் விக்ரம் நடித் ஐ, நடிகர் தனுஷ் நடித்த தங்க மகன், நடிகர் உதய்நிதி ஸ்டாலின் நடித்த கெத்து, நடிகர் விஜய் நடித்த தெறி ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

 

அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் நடிகை எமிஜாக்சன் திரையுலகில் இருந்து விலகி இருந்தார். பின்னர் நடிகை எமி ஜாக்சன் அவர்களுக்கும் இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோ அவர்களுக்கும் நிச்சியதார்த்தம் நடந்து இருவரும் ‘லிவிங் டு கெதர்’ முறையில் வாழ்ந்து வந்தனர். நடிகை எமி ஜாக்சன் அவர்களுக்கும் தொழிலதிபர் பனயிட்டோ அவர்களுக்கும் குழந்தை பிறந்து அந்த குழந்தைக்கும் ஆண்ட்ரியாஸ் எனவும் பெயர் வைத்தனர். ஆனால் திருமணம் நடைபெறுவதற்கு முன்பாகவே நடிகை எமி ஜாக்சன் அவர்களுக்கும் தொழிலதிபர் பனயிட்டோவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர்.

 

இதையடுத்து நடிகை எமி ஜாக்சன் அவர்கள் ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் அவர்களை காதலிப்பதாக செய்திகள் வலம் வந்தது. இதை உறுதி செய்யும் விதமாக எமி ஜாக்சன் அவர்கள் இந்தியா வரும் பொழுது எல்லாம் அவருடன் ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் அவர்களும் உடன் வருகிறார். மற்றும் எமி ஜாக்சன் அவர்களின் குழந்தை ஆண்ட்ரியாஸ் உடன் நடிகர் எட் வெஸ்ட்விக் அவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் அவர்கள் அவருடைய திருமணத்தை பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியுள்ளார்.

 

நடிகை எமி ஜாக்சன் அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நடிகர் எட் வெஸ்ட்விக் என்னுடைய உணர்வுகளுடன் இணைந்துள்ளார். நானும் நடிகர் எட் வெஸ்ட்விக் அவர்களும் சிறந்த சூழலில் உள்ளோம். இதையடுத்து நானும் நடிகர் எட் வெஸ்ட்விக் அவர்களும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளோம். நான் தற்பொழுது நடித்து வரும் ‘மிஷன் அத்தியாயம் 1’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. அடுத்ததாக நான் நடிக்கவிருக்கும் இந்தி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. எனது மகன் ஆண்ட்ரியாஸ் இந்த உலகத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்துக்காக நான் அவனை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து சென்றேன். எனது மகன் ஆண்ட்ரியாஸ்க்கு நான் ஆதரவாக இருக்க வேண்டும்” என்று திருமணம் குறித்தும் மகன் குறித்தும் பதிவிட்டுள்ளார்.

 

நீண்ட நாட்களுக்கு பின்னர் நடிகை எமி ஜாக்சன் அவர்கள் தமிழில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் ‘மிஷன் அத்தியாயம் 1’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிஷன் அத்தியாயம் ஒன்று திரைப்படத்தை இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கியுள்ளார்.

 

மிஷன் அத்தியாயம் ஒன்று திரைப்படத்தில் நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபனா, பேபி லயல், ஜேசன் ஷா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.