Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எந்த டிரஸ் போட்டாலும் தவறா பேசுறாங்க.. நானும் மனுஷி தானே.. நடிகை அனிகா.!

Actress Anikha Surendran

Actress Anikha Surendran: தமிழில் என்னை அறிந்தாள், நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் பேபி அனிகாவாக அறியப்பட்ட நிலையில் தற்போது நடிக்கும் படங்களில் முன்னணி நடிகையாகவும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் தமிழ், மலையாளம், தெலுங்குமொழிகளில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் அனிகா சுரேந்தர். கேரளாவில் பிறந்த நடிகை அனிகா அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தாள் படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன் பிறகு அவருடன் மீண்டும் விஸ்வாசம் படத்தில் நடித்தார்.

குழந்தை நட்சத்திரமாக பார்த்த நடிகை அனிகா தற்போது முன்னணி நடிகையாக பல படங்களில் கமிட் ஆகி உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இவர் சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் இவரை குட்டி நயன்தாரா என்றும் அழைத்தது குறிப்பிடத்தக்கது.

அனிகா சுரேந்திரன் சமூக வலைதளங்களில் அவரின் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து அவர் பேசுகையில் சினிமாவில் உள்ள பெண்கள் எந்த உடை அணிந்தாலும் அதனை பற்றி தவறாக தான் பேசுகிறார்கள்.

மேலும் இவ்வளவு விமர்சனங்களை சந்திக்கிறார்கள். உடை அணிவது என்னுடைய தனிப்பட்ட விஷயம் என்றும், இவ்வாறு பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, நானும் மனுஷிதான் என அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: எனக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கு இவர்கள் தான் காரணம்..!! vj பார்வதி வேதனை..!!

Exit mobile version