Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மலையாள திரையுலகில் கால் பதிக்கும் நடிகை அனுஷ்கா – சம்பளம் எவ்வளவு தெரியுமா ???

#image_title

மலையாள திரையுலகில் கால் பதிக்கும் நடிகை அனுஷ்கா – சம்பளம் எவ்வளவு தெரியுமா ???

கடந்த 2005ம் ஆண்டு முதன்முதலாக தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவுலகில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. முதல் படத்திலேயே இவரது அழகு மற்றும் நடிப்பு திறமை ரசிகர்களை இவர் வசமாக்கியது. அதன் காரணமாக அவருக்கு அடுத்தடுப்பு பட வாய்ப்புகள் வந்து குவிய துவங்கியது. தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்தார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், அஜித், மாதவன், சிம்பு என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது அனுஷ்கா மலையாள திரைப்படவுலகில் கால் பதிக்கவுள்ளார். பேண்டஸி த்ரில்லர் கதைக்களம் கொண்ட படத்தில் இவர் கமிட்டாகியுள்ளார். ரூ.75 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளதாம். ‘கத்தனார்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை அனுஷ்கா வனதேவதை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார், அவரது கதாபாத்திர பெயர் ‘கள்ளியங்காட்டு நீலி’ என்று கூறப்படுகிறது. காட்டிலுள்ள மந்திரவாதி கதாபாத்திரத்தில் ஜெயசூர்யா நடிக்கிறார்.

மலையாள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற ‘ஹோம்’ திரைப்பட இயக்குனர் ரோஜின் தாமஸ் இப்படத்தினை இயக்கவுள்ளார். படப்பிடிப்பில் அனுஷ்கா பங்கேற்ற புகைப்படங்கள் அண்மையில் இணையத்தில் வெளியானதோடு, மோஷன் போஸ்டர் ஒன்றும் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, இப்படத்தில் நடிக்க அனுஷ்கா தனது சம்பளமாக ரூ.5 கோடி கேட்டுள்ளாராம். ஆனால் இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடவேண்டியவை.

Exit mobile version