Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னா நீங்க இப்படித்தான் இருக்கணும்..மனம் திறந்த மெட்ராஸ் பட நடிகை !

எனக்கு கணவராக வரப்போகும் நபருக்கென்று சில தகுதிகள் இருக்க வேண்டும், அந்த நபர் என்னை போலவே நிறைய புத்தகங்களை விரும்பி படிக்கவேண்டும் என்று நடிகை கேத்தரின் தெரசா கூறியுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை கேத்தரின் தெரசா, இந்த படத்தில் இவரது நடிப்புக்கு ரசிர்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றது. இதனை தொடர்ந்து தமிழில் கதகளி, கணிதன், கடம்பன் கலகலப்பு 2, கதாநாயகன் போன்ற பல படங்களில் நடித்தார். இவர் தமிழ் மொழிப்படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப்படங்களிலும் நடித்து பிரபலமானவர். சமூக வலைத்தளங்களில் இவர் கவர்ச்சி ததும்ப மற்றும் ட்ரெடிஷ்னல் லுக்கில் பதிவேற்றும் புகைப்படங்களை பார்க்கவே ஏரளமான ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

33 வயதாகும் இந்த நடிகை இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை, தற்போது தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் எப்படிப்பட்ட தகுதிகளுடன் இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். தனக்கு வரப்போகும் கணவன் குறித்து அவரை கூறுகையில், “எனக்கு கணவராக வரப்போகும் நபருக்கென்று சில தகுதிகள் இருக்க வேண்டும், அந்த நபர் என்னை போலவே நிறைய புத்தகங்களை விரும்பி படிக்கவேண்டும். என்னை விடவும் அவர் உயரம் அதிகமாக இருக்க வேண்டும் மற்றும் எப்போதும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருக்க வேண்டும், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். உணவை நான் விரும்பி சாப்பிடுவதை போலவே எனக்கு கணவனாக வரப்போகும் நபரும் சாப்பிட வேண்டும், இந்த அனைத்து தகுதிகளும் இருப்பவர் தான் எனக்கு வேண்டும், அவர்தான் எனக்கு சரியான ஜோடி” என்று கூறியுள்ளார்.

Exit mobile version