Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கணவர் தற்கொலை குறித்து பிக்பாஸில் கண்ணீர் சிந்திய சீரியல் நடிகை.!!

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளரான பவானி ரெட்டி தனது கணவரின் தற்கொலை பற்றி சென்டிமென்டாக பேசியது ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி மற்றும் சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி. மேலும், சில சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.

நேற்று, விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக பவானி ரெட்டி கலந்து கொண்டார். அதில், அவர் தாம் எப்போதும் அமைதியாக இருக்கும் பெண் என்றும் அதை உடைக்கவே இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பேஷன் டிசைனிங் மீது அதிக ஆர்வம் கொண்டு அதன்பிறகு நடிகையாக மாறியுள்ளார்.

இவர் 23 வயதில் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்ட தனக்கு பேரிடியாக தனது கணவர் தற்கொலை சம்பவம் நிகழ்ந்ததாக கூறினார்.

மேலும், ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் இன்னொருவரை குற்றம் சொல்வார்கள், இவங்க ஏதோ செய்திருக்கிறார். என்று கூறுவார்கள் என்ன நடந்தது என்று யாரும் யோசிக்கவே மாட்டார்கள். என் கணவர் மறைவு எனக்கு மிகப்பெரிய இழப்பு அந்த வலியுடன் தான் இப்போது வரை பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Exit mobile version