Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரஜினியை ஓரங்கட்டிய நடிகை ஜோதிகா.!! யூடியூபில் சாதனை.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் தற்போது ரூ.85 கோடி முதல் ரூ.100 கோடி வரை அதிகபட்ச சம்பளம் வாங்குகிறார்.

தற்போது, அவருக்கு எழுபது வயது நெருங்கிவிட்டது இருந்தபோதிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால், அவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை.

தற்போது, நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் நடிகர் ரஜினியுடன் நடிகை மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சூரி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.

மேலும், இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வரும் நவம்பர் 4 தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 4ம் தேதி அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல் யூடியூபில் வெளியாகியது. அதே நாளில் நடிகை ஜோதிகா, சமுத்திரகனி, சசிகுமார் நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படத்தின் டிரைலரும் வெளியாகியது. நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் உடன்பிறப்பே ட்ரெய்லர் வீடியோவை 68 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஆனால், அண்ணாத்த பாடல் தற்போது வரை வெறும் 50 லட்சம் பேர் மட்டுமே பார்த்துள்ளனர்.

இதைப் பார்க்கும்போது நடிகர் ரஜினியின் மவுசு ஜோதிகாவை விட குறிஞ்சி போச்சா.? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Exit mobile version