நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கிய அரசு!

0
138

நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கிய அரசு!

ஐக்கிய அரபு அமீரகம் 2019 ஆம் ஆண்டில் கோல்டன் விசாவை அமல்படுத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா இருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய இடங்களில் இருக்கும் வியாபாரங்களில் 100 சதவிகித உரிமையை அனுபவிக்க முடியும். இந்த விசாக்கள் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மற்றும் தானாகவே புதுப்பிக்கப்படும்.

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் விதித்துள்ள விதிகளின் கீழ் உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்கள் 10 ஆண்டு விசா, 5 ஆண்டு விசாவைப் பெற முடியும். கோல்டன் விசாவை வைத்திருப்பவர்கள் அந்த விசாவின் காலம் முடியும் வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

அண்மையில் ஐக்கிய அரபு அமீரக அரசு நடிகர் பார்த்திபனுக்கு கோல்டன் விசா வழங்கியது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். இதன்மூலம் கோல்டன் விசாவை பெரும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையையும் பார்த்திபன் பெற்றார்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு நடிகை திரிஷாவிற்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. இதன்மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெரும் முதல் தமிழ் நடிகை என்னும் பெருமையை நடிகை திரிஷா பெற்றார்.

அந்த வகையில், தற்போது நடிகை காஜல் அகர்வாலுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை காஜல் அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள பதிவில், எங்களை போன்ற திரை கலைஞர்களுக்கு இந்த நாடு எப்போதும் ஊக்கமளித்து வருவதாகவும், எனவே இந்த நாட்டின் எதிர்கால ஒத்துழைப்புக்கு நன்றியுடன் காத்திருக்கிறோம் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.