Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கருப்பு பூனை பாதுகாப்பு கொடுத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி செலுத்திய நடிகை கங்கனா ரனாவத்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்-இன்  மரணம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் போன்றவற்றால் மும்பையை ஆட்டம் கண்டிருக்கும் நிலையில் அதைப் பற்றி கருத்து தெரிவித்த கங்கனா ரனாவத், சிவசேனா  தொண்டர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்.

அண்மையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ மும்பை தற்போது பாகிஸ்தான் பிடியில் சிக்கிக் கொண்ட காஷ்மீர் போல காட்சியளிக்கிறது” என்று கருத்து பதிவிட்டால் கோபமடைந்த சிவசேனாவின் பிரமுகர் சஞ்சய் ராவத் “ அப்படினா நீங்க மும்பைக்கு இனி வரவே வேண்டாம்” என்று கடுமையாக சாடினார்.

இதற்கு பதிலளித்த கங்கனா ரணாவத் ” மும்பை ஒன்னும் சிவசேனா கட்சி இல்ல, வரும் செப்டம்பர் 9ஆம் தேதி மும்பைக்கு வர தான் போகிறேன் உங்களால் முடிந்ததை பாருங்கள்” என சவால் விடுத்தார்.

அதன்பின் அவர் தங்கியிருக்கும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க முன்வந்தார். அதோடு மட்டுமல்லாமல் இனி அவருக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதற்காக Y+ பிரிவின் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது.

இதனால் 10 கமாண்டர்களுடன் ரொம்ப பாதுகாப்பாக இருப்பதாக கங்கனா ரனாவத் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version