Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வழக்கறிஞரையும் சிறையில் தள்ளுங்கள்: நிர்பயா வழக்கு குறித்து பிரபல நடிகை ஆவேசம்

நிர்பயா குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய வழக்கறிஞரை சிறையில் அடையுங்கள் என பிரபல நடிகை ஒருவர் ஆவேசமாக பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்த வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் என்பவர் ராஜீவ் கொலையாளிகளை சோனியா காந்தி மன்னித்தது போன்று நிர்பயா கொலையாளிகளையும் நிர்பயா தாய் மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரபல நடிகை கங்கனா ரனாவத் ’நிர்பயா கொலை குற்றவாளிகள் இருக்கும் சிறையில் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கையும் நான்கு நாட்கள் அடைக்க வேண்டும் என்றும் இவர் போன்ற பெண்களால்தான் நாட்டில் அரக்கர்கள் மற்றும் கொலைகாரர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்றும் ஆவேசமாக பதிலளித்தார். கங்கனா ரனாவத் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Exit mobile version