politics:பிராமணர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி நடிகை கஸ்தூரி பேசிய கருத்து சர்ச்சையாகி வருகிவருகிறது.
சென்னை எழும்பூர் பகுதியில், இந்து மக்கள் கட்சி சார்பில், பிராமணர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை ஏற்று நடத்தினார். கட்சி பொருளாளர் குருமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய இருக்கிறார் நடிகை கஸ்தூரி, அதில் காஷ்மீரில் நடப்பது மட்டும் இனப்படுகொலை அல்ல, தமிழகத்தில் நடப்பதும் தான் இனப்படுகொலை. தமிழ் நாட்டில் பல ஆண்டுகளுக்கு மேலாக நடப்பது தான் இனப்படுகொலை. பிராமணர்கள் உணர்வை அழிப்பது இனப்படுகொலை, ஒருவரின் இன உணர்வு மற்றும் அடையாளத்தை அழிப்பது இனப்படுகொலைக்கு சமம் என்று கூறினார்.
பொதுவாக பிராமணர்கள் மற்ற சமூகத்தினரை இழிவு படுத்தி வருகிறார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டுகள் அதிக அளவில் பேசுகிறார்கள். மேலும் ஆரியர்கள் வந்தேறிகள் என்றும் கூறுகிறார்கள். பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என்றால் வேறு யார்? தமிழர்கள் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். மேலும் நான் ஹைதரபாத்தில் நன்கு வருடங்களாக இருந்து வருகிறேன். தெலுங்கு மக்கள் என்னை திராவிடர் எனக் கூறுகிறார்.
அதற்கு நான் தெலுங்கு மக்கள் தான் திராவிடர்கள் என்றும் அதனால் தான் தமிழக அமைச்சரவையில் தெலுங்கர்கள் இருக்கிறார்கள்.
மேலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமா அவர்களே!, உண்மையில் பறையர் இன மக்களுக்கு தான் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும்.