நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு இன்று பிறந்தநாள்.!!குவியும் திரைபிரபலங்களின் வாழ்த்து.!!

0
148

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த திரைப்படத்திலும், இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காகிதம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் மரைக்காயர் எனும் படத்திலும், தெலுங்கில் சர்க்கார் வாரி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிசியான நடிகையான கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அதன் காரணமாக, இவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சக நடிகையான நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி திறமை கொண்ட கீர்த்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையட்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளரான தேவிஸ்ரீபிரசாத் பிரியத்திற்குரிய கீர்த்திக்கு இனிய இசை பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.