Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் மம்மூட்டியை காட்டமாக விமர்சித்த கீர்த்தி சுரேஷின் தந்தை… மலையாள திரையுலகில் பரபரப்பு!

நடிகர் மம்மூட்டியை காட்டமாக விமர்சித்த கீர்த்தி சுரேஷின் தந்தை… மலையாள திரையுலகில் பரபரப்பு!

மலையாள சினிமாவில் கும்பளாங்கி நைட்ஸ் உள்ளிட்ட பல தரமான படங்களில் நடித்த ஸ்ரீநாத் இப்போது கைதாகி இருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நேர்காணலின் போது நேர்காணல் செய்த பெண்ணை அவமதித்ததாக மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியை கேரள போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

ஸ்ரீநாத் தனது சமீபத்திய படமான சட்டம்பியை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்த சர்ச்சையில் சிக்கினார். யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டியளித்தபோது, ​​பெண் தொகுப்பாளினியின் கேள்வியால் ஸ்ரீநாத் தனது அமைதியை இழந்துள்ளார். நேர்காணல் செய்த அந்த பெண் ஸ்ரீநாத்திடம் ‘உங்களுடன் நடித்த நடிகர்களை அவர்களின் ‘ரவுடித்தனத்தின்’ அடிப்படையில் தரவரிசைப்படுத்துமாறு கேட்டபோது கோபமாகி வசைபாடியதாக சொல்லப்படுகிறது. இந்த கேள்வி அவரைக் கோபப்படுத்த ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியதாக குற்றச்சாட்டை அந்த யுட்யூப் சேனல் வைத்தது. இதையடுத்து ஸ்ரீநாத் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் மலையாள சினிமாவில் புதிய படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதுபற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் மம்மூட்டி “யாருடைய வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் விதமாக இப்படி தடை நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது” எனக் கூறியிருந்தார்.

மம்மூட்டியின் இந்த கருத்துக்கு நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான சுரேஷ் குமார் “மம்மூட்டி முழுவதுமாக விஷயங்களை தெரிவித்துக் கொண்டு பேசி இருக்கலாம். ஒரு நபரால் தொடர்ந்து பிரச்சனைகள் வரும் போதுதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நடிகர்களுக்கு மட்டும் வாழ்வாதாரப் பிரச்சனை உள்ளதா? தயாரிப்பாளர்களுக்கு இல்லையா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version