Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்த ரசிகர்! நக்கலாக பதில் அளித்த குஷ்பு!

உடல் எடையை குறைத்து மிகவும் இளமையான தோற்றத்திற்கு மாறியிருக்கின்ற நடிகை குஷ்பு மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றார். சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது அதற்கு விருப்பங்களும் குவிந்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், ரசிகர் ஒருவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் மேடம் என கருத்து தெரிவித்திருக்கின்றார். இதற்கு பதில் தெரிவித்த நடிகை குஷ்பூ நீங்கள் இருபத்தொரு வருடம் தாமதமாக வந்து இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். ஆனாலும் கவலை வேண்டாம் என் கணவரிடம் கேட்டுவிட்டு இது தொடர்பாக நான் பதில் கூறுகிறேன் என்று நக்கலாக பதில் சொல்லியிருந்தார்.

இன்னொரு ரசிகர் உங்களுடைய கணவர் ஏதாவது பதில் தெரிவித்தாரா என்று கேட்க அதற்கு துரதிர்ஷ்டவசமாக நான் அவருக்கு ஒரு மனைவி அதனால் அவர் விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டார் என்னை மன்னிக்கவும் என்று பதில் தெரிவித்து இருந்தார்.

Exit mobile version