Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல நடிகர் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த குஷ்பு! ஆடிப்போன அரசியல் வட்டாரம்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து தேர்தல் திருவிழா களைக்கட்டி வருகிறது. வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல், பிரசாரம், வாக்கு சேகரிப்பு என திரும்பிய திசைகளில் எல்லாம் கோலாகலமாக காணப்படுகிறது. இந்த முறை எப்படியாவது கணிசமான எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்குள் அனுப்பிவிட வேண்டும் என்பதில் தமிழக பாஜக தீவிரமாக உள்ளது. அதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக குறைவான தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தாலும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு வாங்கியுள்ளன. பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் மக்களுக்கு நன்கு அறிமுகமான, பொதுதளத்தில் செயல்பட்ட நட்சத்திர வேட்பாளர்களை களமிறங்கியுள்ளனர்.

Kushboo

 அதில் அனைவராலும் கவனம் ஈர்க்க கூடிய வேட்பாளராக இருப்பவர் ஆயிரம் தொகுதி வேட்பாளர் குஷ்பு. தனக்கு முதலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி தான் ஒதுக்கீடு செய்யப்படும் என நினைத்த குஷ்பு, தேர்தல் அறிவிப்பிற்கு முன்பிருந்தே அங்கு தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஆனால் திடீரென அந்த தொகுதி பாஜக கையை விட்டு போக, தற்போது குஷ்புவிற்கு திமுகவின் கோட்டையான ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த குஷ்பு, தீயாய் பிரசாரத்தையும் தீவிரப்படுத்தியிருக்கிறார்.

Kushboo

ஏற்கனவே நடிகர் கார்த்தி குஷ்புவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், பிரபல நடிகரின் வீட்டிற்கு குஷ்பு நேரிலேயே சென்று ஆதரவு கோரியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸின் தீவிர விஸ்வாசியாக செயல்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகனும் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ராம்குமார் சமீபத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

Kushboo

இந்நிலையில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டிற்கு சென்ற குஷ்பு ராம்குமார், பிரபு மற்றும் அவர்களுடைய ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் சந்தித்தார். ராம்குமாரிடம் ஆதரவு கோரிய குஷ்பு, அவரது குடும்பத்தினருடன் கலகலப்பாக உரையாடிய புகைப்படங்களும், நடிகர் திலகம் புகைப்படத்தின் முன்பு நின்று வணங்கி ஆசிபெற்ற புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

Exit mobile version